புதன், 13 ஜனவரி, 2016
திங்கள், 11 ஜனவரி, 2016
வியாழன், 7 ஜனவரி, 2016
பச்சிளம் குழந்தைக்கு செய்யும் மசாஜ்
By Tamilan at 5:17 AM
No comments
குழந்தைகளுக்கு மசாஜ் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய செய்யத் தான், அவர்களது எலும்புகள் வலுவடைவதோடு, வளர்ச்சியும் சீராக இருக்கும்.
எனவே பிறந்த குழந்தைக்கு தினமும் குளிப்பாட்டுவதற்கு முன் சிறிது நேரம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். குழந்தை உணரும் அளவு அழுத்தமாகவும் மெதுவாகவும் செய்ய வேண்டும்.
குழந்தைக்கு மசாஜ் செய்யும் முறை முக்கியம் தான் என்றாலும் கூட, அவ்வற்றை நன்கு தெரிந்து கொண்டு தான் செய்யவேண்டும். இங்கு ஒருவர் குழந்தைக்கு செய்யும் மசாஜ் எப்படி இருக்கு என்று பாருங்கள்.
செவ்வாய், 5 ஜனவரி, 2016
புருவ முடி திருத்துதல் (THREADING) செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்!
By Tamilan at 5:35 AM
No comments
இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக்கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.
இப்போது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இன்னோர் பழக்கத்தையும் இங்கே விளக்கவே இந்தப் பதிவு!!!!
புருவமுடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்)(THREADING)என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள். புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் பொழுது புருவமுடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும். உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன.
இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது ( த்ரெட்டிங்)(THREADING), கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் (பொட்டுவர்மம் (அல்)சுடரொளியின் காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன.
இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.
இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர்.
இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன. பல ஆங்கில மருத்துவத்துக்கு பிராணன் எங்கே நிலை கொண்டிருக்கிறது. அதை சிதைத்தால் என்ன விளை வுகள் நேரும் என்பது தெரியாது. இதனால் பல ஆங்கில மருத்துவர்கள் கத்திகளை வைக்கக் கூடாத இடத்தில் வைத்து பலரை பரலோகம் அனுப்பி விடுகிறார்கள்.
வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது.மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.
இறைவன் உறையும் இடம் இதுவே!!!! இதை உணர்ந்து நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக் கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவ தானாலும், கண்ணில்இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து, நீட்டித்து, நல்ல பிராணனும், நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள் .
ஞாயிறு, 3 ஜனவரி, 2016
சனி, 2 ஜனவரி, 2016
உடலுறவின் போது விந்து அவசரமாக வெளியேறாமல் இருக்க
By Tamilan at 4:56 AM
No comments
கட்டாயம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியவை
பலூனில் மொபைல் உரை எப்படி செய்வது?
By Tamilan at 4:23 AM
No comments
பலூனை அதிகமாக விசேஷம் நாட்களான கல்யாண வீட்டுகளிலும், பிறந்தநாள் விழாவிலும் தான் அதிகமாக உபயோகிப்பார்கள்! அதை வேற எதுக்காகவும் உபயோகிக்க மாட்டார்கள்!
இங்கு ஒருவர் பலூனில் இன்னும் ஒரு பயன் இருக்கிறது என்றுக்கூருகிறார்.அது என்ன வென்றால் வித விதமான நிற பல்லூன்களில் எப்படி மொபைல் உரை செய்வது என்று செயலாகவே காண்பித்துள்ளார்.
இப்படி அவர் இந்த ஐடியாவை உபயோகித்து பாருங்கள் என்று கூறி இருக்கிறார். இது பலருக்கும் தெரிந்த ஒன்று தான் ஆனால் தெரியாதவர்களுக்கு இது புதிதாக இருக்கும்.
பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான்.......
By Tamilan at 4:18 AM
No comments
பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கருப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.இப்படிதான் ஒருநாள்.
ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான். இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.
வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கனவனின் நன்பருக்கும் Phone செய்கிறாள். கனவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புளம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்.
இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கனவனின் நன்பன் Car எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கனவனை அனைத்துக்கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறான். அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கனவன்.
மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். மனைவியின் உறவினர்கள் வருகின்றனர். அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு... என்கிறார் மருத்துவர்...உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்...
அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவன் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக என்கிறான்.
தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.
((நம் நாட்டு தமிழச்சிகள் இப்போதும் (ஒரு சிலரை தவிர) தன் கணவன் பெயரை வெளியில் சொல்லமாட்டார்கள். அது கணவன் மீதுள்ள ஒரு மரியாதை. காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் நன்பர்களே..
இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.))
உலகின் முதல் தாயுமானவன்: மூன்று குழந்தைகளை பிரசவித்த பின்னர் ஆணாக மாறிய அதிசயம்
By Tamilan at 4:08 AM
No comments
பெண்ணாக பிறந்து, ஆணாக மாறிய பின்னர் உலகில் முதல் ஆணாக கருத்தரித்து, குழந்தையை பெற்று, மேலும் இரு குழந்தைகளை பெற்று, பின்னர் ஆணாகவே மாறிப்போன அதிசய மனிதரைப் பற்றி அறிந்து கொள்வோமா?
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் 1974-ம் ஆண்டு டிரேசி லகாண்டினோ என்ற பெண் குழந்தையாக பிறந்தவர், தனது பதின்பருவ காலத்தில் பெண்மைக்குரிய சுபாவங்களில் இருந்து சற்று மாற்றமான தோற்றத்தில் தெரிய ஆரம்பித்தார். அடடே, நமது இயல்புக்கு ஏற்ற உடலமைப்பு இதுவல்ல.., என தீர்மானித்த டிரேசி, ஆணாக மாறுவதற்கு தேவையான ஹார்மோன் சிகிச்சைகளை மேற்கொண்டதன் பலனாக முகத்தில் மீசை உள்ளிட்ட ரோம வளர்ச்சியுடன் திடகாத்திரமான ஆண்மகனாக தெரிய ஆரம்பித்தார்.
2002-ம் ஆண்டுவாக்கில் நான்சி என்ற பெண்ணை காதலித்து மணந்துகொண்ட பின்னர் தனது பெயரை தாமஸ் பீட்டி என மாற்றிகொண்டார். பெயரை மாற்றிக் கொண்டபோதிலும் தனது பெண்ணுறுப்பு மற்றும் கருப்பையை அகற்றிவிட்டு, ஆணுக்கு தேவையான ‘அம்சங்களை’ பொருத்திக்கொள்ள அவர் முன்வரவில்லை.
இதுவும், தாமஸின் சந்ததி பெருக்கத்துக்கு பெருந்துணையாக அமைந்து விட்டது. விதிவசமாக அவர் மணந்துகொண்ட நான்சி, ஏற்கனவே ஆபரேஷன் மூலம் கருப்பையை அகற்றிக் கொண்டவர் என்பது பின்னர் தெரியவந்த தாமஸ், நாம் முழுஆணாக மாறாததும் ஒருவிதத்தில் நன்மைக்கே என்பதை உணர்ந்தார்.
ஆணாக இருந்தபடியே தனது கருப்பையில் ஒரு குழந்தையை சுமக்க ஆசைப்பட்ட தாமஸின் எண்ணத்துக்கு அவரது மனைவி நான்சியும் தூபம்போட.., விந்துதானம் மூலம் செயற்கை முறையில் கருத்தரித்து 2007-ம் ஆண்டு வீங்கிய வயிற்றுடன் உலகின் முதல் கர்ப்பிணி ஆணாக ஊடகங்களுக்கு தீனிபோட்ட அவர், முதல் குழந்தையை பெற்றெடுத்தார்.
அடுத்தடுத்து, மேலும் இருமுறை கருத்தரித்து, வரிசையாக மூன்று குழந்தைகளை பெற்ற பின்னர், முற்றும் முழுக்க பழைய ஆணின் உருவத்துக்கு மாறினார்.
பின்னர், 2012-ம் ஆண்டுவாக்கில் தாமஸுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு (அவர் முழுமையான ஆணாக இல்லாததால்கூட இருக்கலாம்) அவர்கள் பிரிந்துவிட முடிவெடுத்ததாக முன்னர் அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
அந்த காலத்தில் பெண்ணுறுப்புடன் இருந்த தாமஸும், பிறவியிலேயே பெண்ணாக உள்ள நான்சியும் செய்துகொண்ட காதல் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகத்தக்கதல்ல என தெரிவித்த நீதிமன்றம் அவர்கள் அதிகாரப்பூர்வ தம்பதியர்களல்ல என்பதால், விவாகரத்து வழங்க சட்டத்தில் இடமில்லை என அறிவித்து விட்டது.
பின்னர், மேல்முறையீடு செய்து ஆகஸ்ட்-2014-ல் அந்த வழக்கில் வெற்றிபெற்ற தாமஸ் தற்போது அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் ஆம்பர் நிக்கோலஸ் என்ற தனது புதிய தோழியுடனும், மூன்று குழந்தைகளும் வாழ்ந்து வருகிறார்.
தற்போது, திருநங்கையரின் உரிமைகள், செயற்கை முறை கருத்தரிப்பு மற்றும் வாரிசுகளை உருவாக்கும் உரிமை போன்றவற்றுக்காக தீவிரமாக குரல் எழுப்பிவரும் தாமஸ் பீட்டியைப் பற்றி பல குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு உலகின் பல்வேறு குறும்பட திருவிழாக்களை அலங்கரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது தாயுமானவன் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள இங்குள்ள சிறிய வீடியோ இணைப்பை கிளிக் செய்யவும்.