• This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

வியாழன், 31 டிசம்பர், 2015

இந்த பூனையும் பால் குடிக்குமா ?




Mishari Rashid அவர்களின் அழகான நசீத்



புதன், 30 டிசம்பர், 2015

கணவன் மனைவிக்கிடையிலான புரிந்துணர்வு

ஹிந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள்  எல்லோரும் இதை பாருங்கள்   எல்லோருக்கும் பயன் பெறும்



திங்கள், 28 டிசம்பர், 2015

கணணி ஓவியத்தால் அழகாக உருவான பெண்

ஓவியம் என்றாலே அழகுதான் அதிலும் நிஜத்தை போலவே வரையப்படும் தத்ருபமான ஓவியங்களை பார்த்து கொண்டே இருக்கலாம். தத்ருபமான ஓவியத்தை கைகளால் மட்டும்மல்ல இணையத்திலும் வரையலாம் என்று ஒரு கலைஞர் நிருப்பித்துள்ளார்.
இந்த கலைஞர் ஒரு சில குறுகிய நிமிடங்களில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை குழந்தை பருவம் முதல் முதியவர் வரை சித்தரித்து அனைத்து வேறுபாடுகளையும் காட்டி உருவாக்கியுள்ளார்.
ஒவ்வொரு பருவத்தின் மறுதல்களை தொழில் நுட்பம் முலம் மிக அழகாக காண்பிதுள்ளார். அவ்வாறு இந்த கலைஞர் ஒரு அழகிய பெண்ணை உருவாக்கிய விதத்தை நீங்களும் பாருங்கள்.



ஞாயிறு, 27 டிசம்பர், 2015

நிகழ்ச்சியை நடத்தியோரை திருக்கை வாலால் அடிக்க வேண்டும்- ஜனாதிபதி

நாட்டின் கலாச்சாரத்தை அழித்த ‘என்ரிக் லைவ் ஷோ’ நிகழ்ச்சியை நடத்தியோரை திருக்கை வாலால் அடிக்க வேண்டும்- ஜனாதிபதி
பணத்துக்கு இடமளித்து இளம் சமூகத்தை தவறாக வழிநடத்தும் ஒழுக்கக்கேடான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு அரசாங்கம் இனிமேல் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி , கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வெளிநாட்டு கலைஞரொருவரின் பங்குபற்றலில் அண்மையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி குறித்த நிகழ்ச்சியின் போது பெண்கள் மார்புக் கச்சையை கழற்றி மேடையை நோக்கி வீசியதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒழுக்கக்கேடான நிகழ்ச்சிகள் இதன்பின்னர் நடத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  இந்நிகழ்ச்சி தொடர்பில் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்திருந்தார்.
உலகப் பிரசித்தி பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) பங்குபற்றிய ‘ENRIQUE IGLESIAS LIVE IN COLOMBO’ என்ற குறித்த நிகழ்ச்சியை ‘Live Events’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
Live Events நிறுவனத்தின் உரிமையாளர்கள் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் ஆவர்.
இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதம் தொடர்பில் நாடு முழுவதும் மற்றும் சமூகவலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான காரணம் இந்நிகழ்சியின் போது அரங்கேறிய இலங்கையின் கலச்சாரத்திற்கு பொருந்தாத அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமையாகும்.
இந்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு நிகழ்வுக்கும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளது இந்நிகழ்ச்சியை மையப்படுத்தியே ஆகும்.



“கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற வெளிநாட்டு கலைஞர் பங்குபற்றிய இசை நிகழ்ச்சியின் போது 5000 முதல் 50,000 வரை டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டன, உள்ளே நுழைந்ததும் டிக்கெட்டின் விலைக்கமைய குடி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இதிலே அநாகரிகமான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில் என்னால் பேசாமல் இருக்க முடியாது. நாட்டில் கலாச்சாரத்துக்கு பாதிப்பு ஏற்படுமானால் அது தொடர்பில் பேசவேண்டியுள்ளது.
ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்நிகழ்வில் நமது இளைஞர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிந்தது. பெண்கள் தமது மார்புக் கச்சையை கழற்றி அப்பாடகருக்கு வழங்கினர். பின்னர் இளம் பெண்கள் மேடை மீது ஏறி பாடகரை கட்டியணைத்துகொண்டனர். பிரண்டி , விஸ்கியினால் ஏற்பட்ட வெறியே அது. அவர்களுக்கு நான் கூறவில்லை இதனை ஏற்பாடு செய்தோரைக் கூறுகின்றேன், அவர்களை திருக்கை வாலால் அடிக்கவேண்டும்” என்றார்.
மேலும் இனிமேல் இவற்றுக்கு இடமளிக்கப்போவதில்லையெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பானைக்குள் சிக்கிய குழந்தையின் தலை

பெற்றோகளே   பிள்ளைகளை பெறுவது போல இல்லை  வளர்ப்பதும்  கவனமாக  வளருங்கள்


யார் இந்த ஆனந்த தேரர்..?

அமைச்சர் றிசாத் ஏன் அவருடன் நேரடி விவாதத்திற்கு செல்கிறார்..?
( அமைச்சரின் ஊடகப் பிரிவின் விளக்கம் இது)




சனி, 26 டிசம்பர், 2015

WoW அடேங்கப்பா என்ன ஆட்டிஸ்ப்பா



மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை

மிமிக்கிரி என்பது அற்புதமான கலை , அது முயற்சி செய்தால் மட்டுமே முடியும். மனிதர்களுடைய குரல் மற்றும் சில ஒலிகளை செய்வது என்பது சிறிது முயற்சியிலேயே செய்து விடலாம்
ஆனால் மிருகங்களின் சத்தங்களை மிமிக்கிரி செய்து காண்பிப்பது கொஞ்சம் கடினமகவே இருக்கும் . ஏனெனில் ஒவ்வொரு மிருகங்களின் ஒலியும் வித்யாசமானவை அதுவும் ஒரு பெண் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று
ஏனென்றால் பெண்ணின் குரல் வளம் மெல்லியது மிருகங்களின் ஒலிகள் மிகவும் கடினமானவை. அவ்வாறு எல்லா மிருகங்களின் ஒலிகளை அப்படியே அசால்டாக ஒரு பெண் மிமிக்கிரி செய்து காட்டுவதை பாருங்க.





                                                 http://www.manithan.com/

மிரள வைக்கும் ஓவியக்கலை

ஓவியக்கலை என்பது எல்லோருக்கும் வருவது இல்லை. அது ஒரு சிலருக்கே மட்டும் தான் அந்த அற்புதமான கலை கடவுளால் கொடுக்கப்படுகிறது. அவர்கள் அந்த கலையை நிதானமாக கையாளுவார்கள்.
இங்கு ஒரு மனிதர் தன்னுடைய ஓவிய கலையால் பார்பவர்களை பிரம்மிக்க செய்துள்ளார். அவர் பாம்பு ஒன்று இருப்பதை போல வரைந்து காட்டியுள்ளார். அதில் அந்த பாம்பு இருப்பதை போல தான் காட்சி அளிக்கிறது.
இந்த ஓவியத்தை வரைய அவர் எவ்வளவு நிதானமாக இருந்திருப்பார் என்று பார்த்தால் தெரியும் ஆனால் அதை வேகமான கேமராவில் நாம் அந்த ஓவியத்தை அவர் எப்படி வரைகிறார் என்று காணலாம்.