வியாழன், 24 டிசம்பர், 2015

திடிரென புலி கூண்டில் குதித்த சுற்றுலா பயணி - பரபரப்பு நிமிடங்கள்

சீனாவில் உள்ள வனவிலங்கு சரணலாயம் ஒன்றில் சரணாலயத்தை சுற்றிப்பார்க்கவும் புலிகள் நடமாடும் பகுதிக்கு மேலே நபர்களை ஏற்றிச்செல்லும் ‘ரோப் கார்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சுற்றிப்பார்க்க சென்றிருந்த சுற்றுலா பயணி ஒருவர் திடீரென புலிக் கூண்டிற்குள் குதித்தார்.
அவர் குதித்த வேகத்தில் கீழே கட்டப்பட்டிருந்த வலையில் விழந்ததும் அங்கு சுற்றிக்கொண்டு இருந்த புலிகள் அவரை நோக்கி பாய்ந்து வந்துள்ளன. மேலும், சில அடிகள் உயரத்தில் இருந்த அந்த நபரை பிடிக்க புலிகள் ஒவ்வொன்றும் போட்டியிட்டு தாவி குதித்தன.
இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த சரணாலய காவல்காரர் விரைவாக வந்து ஏணி மூலமாக ஏறி அந்த நபரை காப்பாற்றியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து காவலர் ஒருவர் கூறுகையில், "வலையில் குதித்த நபரை காப்பாற்ற சென்றபோது அந்த நபர் ‘நான் இன்னும் சரியாக குதிக்க வில்லை’ என கூலாக பதிலளித்ததாக கூறியது ஆச்சரியமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக