துளி மீசை கொண்டிருந்த இருவர் உலகை ஆட்டிப்படைத்தார்கள். ஒருவர் ஹிட்லர், இன்னொருவர் சாப்ளின். நாம் எல்லோர் நினைவிலும் அழியாது இருப்பவர் நகைச்சுவை மன்னர் சார்லின் சாப்ளின். தனது 14வது வயதிலேயே கலைதுறையில் கால்பதித்தவர்.
பேசும் படங்கள் உலகை முற்றுகையிட்ட பொழுது மவுனமாக ரசிகனிடம் மவுனப்படங்களின் மூலம் சாதிக்க முடியும் என சவால் விட்டவர். இவர் நடித்த வசனம் இல்லாத படங்கள் எல்லோராலும் பேசப்பட்டது.
அவ்வாறு இந்த காட்சியில் இவர் சிங்கம் குகை ஒன்றில் மாட்டிகொண்டு படும்பாட்டை நகைச்சுவை உணர்வோடு வெளிபடுத்தியுள்ளார். உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் நினைவு தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக